Friday, November 22, 2013


சிதம்பரம் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு அணிவிக்க ரூ.3.5 கோடி மதிப்பில் உருவான இரு பவழ மாலைகளை பக்தர் ஒருவர் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

சிதம்பரம் சாஹரி அம்மாள்-விஸ்வநாத ஐயர் நினைவாக அவரது குடும்பத்தினர் இந்த இரு பவழ மாலைகளையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். மாலையில் உள்ள பவழமணிகளின் எடை 961 கிராம் 600 மில்லியாகும். இவை இத்தாலி நாட்டைச் சேர்ந்தவை. இந்தப் பவழ மணிகளை கொண்டு 20 சவரனில் மாலைகள் செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீநடராஜர் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாலைகளை விஸ்வநாத ஐயர் குடும்பத்தாரின் கட்டளை தீட்சிதரும், ஸ்ரீசபாபதி சங்கீத கானசபா செயலாளருமான ஸ்ரீஐயப்ப தீட்சிதர், கோயில் பொதுதீட்சதர்களின் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் பட்டுதீட்சிதர், சோமாஸ்கந்தர் தீட்சிதர் ஆகியோரிடம் வழங்கினார். மேலும் இந்த பவழ மாலைகளை வருகிற மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழாவில் தேர் மற்றும் தரிசனத்தின் போது ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு அணிவிக்கப்படும் என ஸ்ரீஐயப்ப தீட்சிதர் தெரிவித்தார்.                 

தினமணி= 22 - 11 -2013                                        

0 comments:

Post a Comment