Monday, November 4, 2013

sankaranarayana 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ளது சங்கரநாராயண சுவாமி திருக்கோயில். .சங்கரலிங்கப் பெருமான் உடனுறை கோமதி அம்மன் அருள்பாலிக்கும் இடம். கன்னியாகுமரியருகே வங்கக் கடலில் உருவான இரு காற்றழுத்த மண்டலங்க்களால் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும் என்ற செய்தியை tamilspeak இணையம் ஏற்கனவே சேகரம் செய்து வெளியிட்டிருந்தது. அதேபோன்று தென்மாவட்டங்களில் பரவலாகக் கன மழை பெய்தது. இடியுடன் கூடிய கனமழை சங்கரன்கோவிலிலும் தொடர்ந்தது. .இந்நிலையில், அங்குள்ள இராஜகோபுரத்தின் மீது இடி விழுந்தது. அதன் தென்பகுதியின் மேற்புறத்தில் உள்ள ண்சிற்பம் உள்ளிட்ட சில பகுதிகள் சிதைந்து கீழேவிழுந்தன. இடிமின்னல் தாக்கியதால் ஏற்பட்ட கருகிய நிறம் 15 அடிக்கு மேல் கோபுரத்தின்மீது பரவியது. அதிர்ச்சியால் உறைந்த பொதுமக்கள் ஆடித் தவசுக்காட்சித் திருவிழா நிகழ்வுகள் நடைபெறும் தெற்குரதவீதியில் அணிதிரண்டனர்.  சிதைவுகளைச் சரிசெய்யும் முயற்சிகளை கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.தமது  தமக்குப் 10-12 வயதாக இருக்கும்போது இதுபோன்று கோவில் கோபுரத்தின்மீது இடிதாக்கிய நிகழ்வைப் 65 வயதுப் பெரியவர் ஒருவர் எல்லோரிடமும் நினைவுகூர்ந்தார்.

பட உதவி :- தினமணி

0 comments:

Post a Comment