Thursday, November 14, 2013

கந்த சஷ்டி கொண்டாடுவது ஏன்? Significance of Kanda Sashti
View this email in your browser
Visit www.Murugan.org
Visit www.Tiruchendur.org
Visit www.Murugan.org
Facebook
Facebook
Twitter
Twitter
Pinterest
Pinterest
Murugan.org
Murugan.org
Tiruchendur.org
Tiruchendur.org
Palani.org
Palani.org
Email
Email
கந்த சஷ்டி கொண்டாடுவது ஏன்?
எழுதியவர் திருமதி உமா பாலசுப்பிரமணியன்
முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
முருகன் அவதாரம்
கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்? சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு, வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது .ஒருசமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி, ஆறு நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட, முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது. கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.
கண்ணாடிக்கு அபிஷேகம்
ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். 'சாயா' என்றால் 'நிழல்' எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும். இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப்பின்பு, முருகன் சன்னதிக்கு திரும்புவார். இத்துடன் சூரசம்ஹார வைபவம் நிறைவடையும்.
தெய்வானை திருக்கல்யாணம்
சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று, முருகனை மணந்து கொள்ள வேண்டி தவமிருப்பாள். மாலையில் குமரவிடங்கர் (முருகனின் ஒரு உற்சவர் வடிவம்), முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு திருமணம் நடக்கும். மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவார்.
முருகனுக்கு மஞ்சள் நீராட்டு!
கிராமங்களில் திருவிழாவின்போது, கன்னிப்பெண்கள் தங்களது முறைப்பையனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர். இத்தலத்திலும் இவ்வாறு முருகனுக்கு மஞ்சள் நீராட்டும் வைபவம் நடக்கும். கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில் முருகன், தெய்வானையுடன் வீதியுலா செல்வார். அப்போது, பக்தர்கள் தங்கள் ஊரில் திருமணம் செய்து கொண்ட முருகனை வரவேற்கும்விதமாகவும், போரில் வென்றதன் உக்கிரத்தைக் குறைக்கும் விதமாகவும் அவர் மீது மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்வர்.
மும்மூர்த்தி முருகன்!
முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர். அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர். சூரனை சம்ஹாரம் செய்து, பின் மகாவிஷ்ணுவின் மகளை மணந்து கொண்டவர். மாமனான மகாவிஷ்ணுவின் பாசத்திற்கு கட்டுப்பட்டவர். இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவராக இருக்கிறார். இதனை உணர்த்தும்விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாவின்போது சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார். விழாவின் 7ம் நாளன்று மாலையில் இவர் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாக காட்சி தருகிறார். மறுநாள் (8ம்நாள்) அதிகாலையில் இவர் வெண்ணிற ஆடையில் பிரம்மாவின் அம்சமாக அருளுவார். மதிய வேளையில் பச்சை வஸ்திரம் சாத்தி பெருமாள் அம்சத்தில் காட்சியளிக்கிறார்.

இந்தக் கட்டுரையை எழுதிய திருமதி உமா பாலசுப்பிரமணியன் அவர்கள் சிறந்த எழுத்தாளர். பல ஆன்மீகப் பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.ஆர்வமுள்ளவர்களுக்கு திருப்புகழை இசை வழி பயிற்றுவிக்கிறார்.தன் தந்தை அமரர் வாகீச கலாநிதி திரு கி. வா. ஜ அவர்களைப் போலவே இறைப்பற்றும் தமிழ்ப்பற்றும் மிக்கவர். தொடரட்டும் இவர் தொண்டு! வாழ்க தமிழ்! வளர்க முருக பக்தி!
 

Significance of Kanda Sashti

 Summary-translation
by Malathi Jayaraman
of original Tamil article
by Uma Balasubramanian

Lord Muruga won the battle against Surapadma, the demon, on the sixth day of the waxing moon in the Tamil month of Aipasi (Oct-Nov) and incorporated Surapadman as the rooster for His staff and as the peacock for His mount. Thus he is replete with mercy even for His foes! This day is celebrated as Kanda Sashti. This great event happened in Tiruchendur and hence Kanda Sashti is celebrated with grandeur here.

Lord Murugan’s Birth
There are two more reasons for celebrating Kanda Sashti apart from Surapadman's vanquishment, according to Mahabharatha and Kanda Puranam. Once some sages conducted a yagna1 asking for a son who would be the benevolent protector and benefactor for this universe. The yagna commenced on the new moon day of the Tamil month 'Aipasi' and went on for six days. Each day one seed was collected from the fire erupted out of Yaga Kundam (sacrificial fire altar) for six days. When they were put together on the sixth day Lord Murugan was born. Thus Lord Murugan's birth is depicted quite differently in Mahabharata.

In the Kanda Puranam, Kachiappa Sivachariyar says the Devas tormented by Asuras invoked Lord Muruga in a kumbham2 on the first day of the waxing moon in the Tamil month of 'Aipasi'. The Devas propitiated Him for six days to confer His grace on them and give them the courage and strength to challenge the Asuras. Lord Muruga granted them the boon and Kanda Sashti is celebrated to commemorate this.
.
Anointment to the Mirror
Victorious Jayanthinathar (processional deity) reaches the sanctum of Lord Mahadeva in the prakaram (paved corridor around the sanctum sanctorum of the temple) after Soora Samharam (conquest of Surapadman). Then a mirror is placed in front of Lord Muruga and abhishekam3 is performed for the mirror image. This is known as 'Chayabishekam'. ‘Chaya’ means shadow. This is performed to pacify Lord Muruga after the fierce battle with Surapadma. The tradition is that Lord Muruga enjoys this 'Mirror Abhishekam'. This is the concluding event of Soora Samharam (Annihilation of Surapadman) and Lord Muruga returns to His sanctum.

The next day that is the seventh day is the day of celestial wedding. Celestial King Indira gives his daughter Deivanai in marriage to Lord Muruga as a token of gratitude for restoring his kingdom by defeating the demon. He also serves Lord Muruga in the form of a holy peacock. The marriage took place at Tirupparankunram, the first 'Padai Veedu'.4 This holy wedding is celebrated at Tiruchendur also on the next day of Kanda Sashti since it is the place where Surapadman was subjugated and salvaged.

Theivanai reaches 'Thapasu Mandapam' on that morning and waits meditating and beseeching Him to marry her. Kumaravidanga (another processional deity) representing Lord Muruga mounted on His peacock reaches there in the evening. He garlands and is engaged to Deivanai. Both reach 'Tirukkalyana Mandapam' (wedding hall) at midnight and the holy wedding commences. The next day they are taken out in procession in the streets. For the next three days Lord Muruga gives darshan to his devotees seated on a beautiful swing (oonjal)

Turmeric Bath for Lord Murugan
On the last day of Kanda Sashti, Lord with His consort Deivanai goes out in the streets to meet His people. In the rural areas of Tamil Nadu there is a customary frolic. Maidens pour turmeric mixed water on the young boys on whom they have a customary claim of marriage. In the similar way Lord Muruga is received with fervor. They pour turmeric water on Him to welcome the 'son of the soil' and His newlywed spouse and to mollify their valorous Lord's ire after the battle.

The Trinity, Lord Murugan
Lord Murugan incarnated as an aspect of Lord Shiva. He, as guru, taught the meaning of pranava mantra 'Om' to His father. He incarcerated Lord Brahma who could not expound the meaning of pranava mantra. He married Lord Vishnu's daughter after the extermination of Surapadman. He is bound by the affection of His uncle Maha Vishnu. Thus Lord Muruga is related to all the three lords (Trimurti). To signify this Lord Murugan appears as incarnation of the three Lords in Tiruchendur. Lord Muruga appears as their incarnation during the festivals celebrated in the Tamil months of Avani and Masi. He appears as Lord Shiva attired in resplendent red on the seventh day of the festival. The next day He is dressed up in white to bless us as Lord Brahma. He is adorned with gorgeous green in the noon and bestows His benevolence on us.

(1) Yagna
Yagna is an ancient ritual of offering and sublimating herbal preparations into the fire accompanied by chanting of Vedic mantras in order to propitiate the deities.

(2) Kumbham
An earthen pot or pitcher, full of water with fresh mango leaves and a coconut atop it is generally placed as the chief deity or by the side of the deity before starting a puja.

(3) Abhishekam [Holy Bath]
Abhishekam is the process of bathing the deity with sacred water. Simple abhishekam is bathing the deity using Holy water and elaborate abhishekam is using milk, honey, curd, coconut water, sugar cane juice and many other things.

(4) Padai veedu
Holy Abode (literally, ‘battle camp’)

Translated by Malathi Jayaraman

Original article in Tamil by:
Uma Balasubramanian
6/25, Subbu Street
Thiruvaanmiyur, Chennai - 60041
Tel.  044 - 24520306  
Mobile No  09962608538

0 comments:

Post a Comment