Tuesday, October 27, 2015



ஏன்  பிறந்தேன் ?

பொல்லா  தவன், நெறி  நில்லா  தவன். மெய்ஐம்புலன்கள்  தமை
வெல்லா  தவன்,  கல்வி  கல்லா  தவன், மெய்யடியவர்  பால்
செல்லா  தவன்,  உண்மை
சொல்லா  தவன், நின் திருவடிக்கன்(பு)
இல்லா  தவன், மண்ணில் ஏன் பிறந்தேன். கச்சியே கம்பனே.


கொடியவன் ஏன் பிறந்தேன்?

மண்ணில் எல்லோரும் நல்லவர்களாகப் பிறந்திருக்கிறார்கள். நான்  மட்டும் கொடியவனாகப்  பிஅந்திருக்கின்றேனே?  ஏன்  பிறந்தேன்?

நான்

பொல்லாதவன்

நன்னெறியில் நில்லாதவன்

மெய்,  வாய்,  கண்,  மூக்கு,  செவி  என்னும்  பொறிகளின் அறிவை

ஆற்றுப்படுத்தி வெற்றி  பெறாதவன்

கல்வியை  முறையோடு  கல்லாதவன்

அடியவரிடம்  செல்லாதவன்

உண்மையை  எடுத்துச்  செல்லாதவன்

காஞ்சிபுரத்திலுள்ள  ஏகாம்பநாதனே !

உன் திருவடிக்கு அன்பு  இல்லாதவன்

இப்படிப்பட்ட  நான்  இந்த  மண்ணுக்குச்  சுமையாக  ஏன்  பிறந்திருக்கிறேன் ?


விக்கிபீடியர், சிறந்த தமிழறிஞர், 15-05-2010 -ஆம் நாள், புதுமனை புகுந்தார்.

பல்வேறு பாடல்களைக் கொண்ட 32 பக்க நூலைப்  பரிசாக அளித்து

மகிழ்ந்தார். அதிலிருந்து ஒரு பாடல் இது.

0 comments:

Post a Comment