சங்கரன்கோயில் கோபுரம் மற்றும் தலைவாசல்
சங்கரலிங்கப்பெருமான் உடனுறையும்
கோமதிஅம்பாள் என்ற ஆவுடைஅம்மன்
கோபுரத்துடன் கூடிய நாகசுனை
சங்கரநயினார்கோவில் ஐம்பூதத் தலங்களில் ஒன்று. இது மண் தலம் தாருகாபுரம் நீர்த்தலம். தென்மலை காற்றுத் தலம்.கரிவலம்வந்தநல்லூர் தீத்தலம். தேவதானம் ஆகாயத்தலம். இவ்வைந்தனுள் சங்கரன்கோவிலே முதன்மையானது.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை சிவராத்திரியின்போது பல சிவனடியார்கள் ஒன்றுகூடி, இவ்வைந்து கோயில்களையும், அவ்விரவிலேயே கால்நடையாகச் சென்று வழிபட்டு வந்தார்கள். இப்போதும் சிலர் அங்ஙனம் செய்து வருகிறார்கள்.
சங்கரனார் கோவில் முகப்பில் 125 அடி உயரமுள்ள ஒரு பெரிய கோபுரம் இருக்கிறது.இது ஒன்பது நிலைகளைக் கொண்டது. கோபுரத்தின் உச்சி தென்வடல் நீளம் 56 அடி. கீழ் மேல் அகலம் 15 அடி. உச்சியிலுள்ள குடம் ஏழடி நான்கு அங்குலம் இருக்கின்றது.
பல மைல்களுக்கு அப்பால் வரும்போதே இக்கோபுரம் தெரியும். அதனால் இவ்வூரை நோக்கி வருபவர் யாவரும் நெடுந்தூரத்திலிருந்தே சங்க்கரலிங்கப்பெருமானையும் கோமதியம்மனையும் நினைத்துக் கொண்டு பக்தி நிறைந்த மணத்துடன் வருகிறார்கள்.
0 comments:
Post a Comment