ஹென்றி பவர்
சீகன் பால்க் மொழிபெயர்ப்பு வழக்கொழிந்து மறக்கப்பட்டுப் போனதாலும்,
பப்ரிசியுசின் மொழி பெயர்ப்பிலும், இரேனியுஸ் மொழி பெயர்ப்பிலும்
குறைபாடுகள் இருந்த காரணத்தாலும், சென்னை வேதாகமச் சங்கம், எல்லா
புரோட்டஸ்தாந்து சபைகளும் ஏற்றுக் கொள்ளும் விதமாக ஒரு புதிய தமிழ்
மொழி பெயர்ப்பை உருவாக்கும் எண்ணத்தில், ஹென்றி பவர் ஐயரைத்
தலைமை மொழி பெயர்ப்பாளராகவும், அவருக்கு உதவியாக மற்ற
சபைகளைச் சேர்ந்த ஏழு பேரைக் கொண்ட ஒரு குழுவையும் நியமித்தது.
இந்தக் குழுவில், டாக்டர் கால்டுவெல், சார்ஜென்ட் ஐயர், திரேசி ஐயர், திரு.
முத்தையா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த மொழிபெயர்ப்புதான்,
இரண்டு முறை திருத்தப்பட்டுள்ளது. இன்று தமிழ் பேசும் கிறித்தவர்கள்
கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் வேதாகமம் ஆகும்.
இவரின் மொழிபெயர்ப்பு, பவர் மொழிபெயர்ப்பு, அல்லது ஐக்கிய
மொழிபெயர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த குழுவின் தலைவர்
ஹென்றி பவர் ஐயரின் கல்லறை திருநெல்வேலி, பாளையங்கோட்டை
மிலிட்டரி லைன், கிறிஸ்து ஆலயக் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம்
செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உதவி :- தமிழ் விக்கிப்பீடியா
தமிழ் விக்கிப்பீடியாவிற்குக் கட்டுரை எழுத விரும்புபவர்கள் இந்த
எழுத்துநடையை மாதிரியாகக் கொள்ளவும்.
0 comments:
Post a Comment