Friday, October 25, 2013



நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆயிரம் விசைத்தறிகள் உள்ளன. இந்த விசைத்தறிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு தீபாவளி போனஸ் 10 சதவீ தம் வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு ஏற்படாததால் விசைத்தறி தொழிலாளர்கள் கடந்த 23–ந்தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இருந்த போதிலும் இந்த பிரச்சினையில் தீர்வு ஏற்படவில்லை.

இதனையடுத்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஏராளமான விசைத்தறி தொழிலாளர்கள் சங்கரன்கோவில் தாலுகா அலுவலத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் இன்று 3–வது நாளாக நீடிக்கிறது.

இதனால் விசைத்தறிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர் நலச்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நெல்லையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பேச்சுவார்த்தை நடக்கிறது.                                                                                                                                          

மாலைமலர் - 25 - 10 -2013

0 comments:

Post a Comment