Wednesday, November 27, 2013


உருவம், அருவம் இரண்டுமே இணைந்த அருவுருவமாக இருக்கிறது லிங்கம். வடிவம்' என்ற சொல்லுக்கு மற்றொரு பொருள் லிங்கம்' என்பதுதான் உருவ வழிபாட்டில் தொடங்கும் போது, உள்முகப பயணம், உச்சியைத் தொடும்போது,இறைத் தன்மையை உருவமற்ற அருவநிலையில் காண்பதில்தான் முடியும். அளப்பற்றிய ஆற்றலை பன்னெடுங்காலம் தன்னுள் இருத்திக் காத்துவரும் ஆற்றல் கொண்டதுதான் லிங்கம். இக்கருத்து நவீன விஞ்ஞான யுகத்திலும் பொருந்தி வருவதைக் காணமுடிகிறது. ஆமாம், அணுசக்தி மின் நிலைய ரீ ஆக்டர்கள் லிங்க வடிவில்தான் இருக்கின்றன.

ஸ்தாவர லிங்கம், ஜங்கம லிங்கம் ஒரு குறிப்பிட்ட காரனத்துக்காக நிறுவி தண்ணீரில் கரைத்துவிடும் ஷனிக லிங்கம்.சில ஆப்பிரிக்க நாடுகளில் மாந்திரீக நோக்கத்தோடு பயன்படுத்துகின்ற டெரகோட்டா லிங்கங்கள் காணப்படுகிறன.கிரீஸ் நாட்டில் பூமிக்குக் கீழே ஒரு லிங்கம் வைத்திருக்கிறார்கள். அதை பூமியின் தொப்புள் என்று சொல்கிறார்கள்.மணிப்பூரகச் சக்கரம் தொப்புளுக்கு அருகில் இருப்பதை கருத்தில் கொண்டு பார்த்தோமானால் அந்த லிங்கத்தின் அதிர்வு மணிப்பூரகத்தைத் தூண்டிவிடும் என்று சொல்ல முடியும். யோக அறிவியல் முதல் வடிவம், இறுதி வடிவம் லிங்கம் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவர் நல்ல தியான நிலையில் இருப்பரென்றால் அவரது சக்தி ஆற்றலின் வடிவம், லிங்க வடிவத்தை ஒட்டியே இருக்கும்.

அருவமாய் உள்ள சிவ பரம்பொருள் அருவுருவ நிலையான சோதி சொரூபத்தை முதற்கண் தாங்கிக் கொள்ளத் திருவுள்ளம் கொண்டது.அந்த சோதி சொரூமே சிவ்லிங்க வடிவமாகும். லிங்கம் என்பதற்கு குறி என்பது பொருள்.குறி என்றால் அடையாலம் காணமுடியாத இறைவனைக் காணுவதற்குரிய அடையாளம் சிவலிங்கமாகும்.

லிங்கங்களில் பலவகை உண்டு. சுவயம்பு, தெய்வீகம், ஆருஷம், மானுஷம், ராட்சஸம், காணவம், கிரியா லிங்கங்கள் முதலின. சுவயம்பு லிங்கம் தானாக உண்டானது; தெய்வீக லிங்கம் தேவியாலும் தேவர்களாலும் பூஜிக்கப்பட்டது; ஆருஷம் ரிஷிகளால் பூஜிக்கப்பட்டது; ராட்ஸம் இராவணன்,பத்மாசூரன், பாணாசூரன் போன்றவர்களால் பூஜிக்கப்பட்டது; காணவம் தேவகணங்களால் பூஜிக்கப்பட்டது, கிரியா லிங்கம் ஆன்மார்த்தப் பூஜைக்குரியது.

சதுர வடிவமான அடிப்பகுதி பிரம்ம பாகத்தை குறிக்கிறது. லிங்கத்தின் அடிப்பாகம் எட்டு கோணமாயிருக்கும்.

அது ஆவுடை என்ற பீடத்தினுள் அமைந்திருக்கும். இதை விஷ்ணு பாகமாகவும், இதற்கு மேல் காணப்படும் பாகம் நீண்ட வட்ட வடிவமாய் இருக்கும். இது சிவ பாகத்தை குறிக்கும். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்தியின் உள் அடக்கமே சிவலிங்கம்.

லிங்கம் பீடத்தின் மேல் நிறுவப்படும். இப்பீடத்திற்கு பிண்டிகை என்று பெயர். சதுர வடிவமாகவும் அல்லது வட்ட வடிவமாகவும் அமைந்திருக்கலாம். லிங்கம் என்பது மூன்று வகைப்படும். இதனை நிஷ்களம், சகளம் என்று கூறுவர். நிஷ்களம் என்பது அரூப சிவம், சகள நிஷ்களம் மூலஸ்தான சிவலிங்கத்தைக் குறிக்கும். சகளம் என்பது நடராஜர் முதலான மற்ற ரூபங்களை குறிக்கும். சகளம் எனப்தில் அறுபத்து நான்கு உருவங்கள் அடங்கியுள்ளன. அதில் இருபத்தைந்து முக்கியமானவை. அவற்றில் மிகமிக முக்கியமானவை ஒன்பது உருவங்கள்.

1.       லிங்கம், 2. லிங்ககோற்பவர், 3. சந்திரசேகர், 4. சோமாஸ்கந்தரர், 5. பைரவர், 6. வீரபத்திரர்,
7. நிருத்த மூர்த்தி, 8. தெட்சிணாமூர்த்தி, 9. பீக்ஷாடன மூர்த்தி ஆகியவை.

தாயாகித் தந்தையுமாகி உயிர்களைத் தாங்குகின்ற தெய்வம் சிவபெருமான். அருளாளனாகத் திகழும் அந்தப்  
பொருமானை அம்மையே அப்பா' என்று வாய் மணக்க வாழ்த்துகின்றர் திருநாவுக்கரசர்.படைத்தல், காத்தல்,
அழித்தல்,மறைத்தல்,அருளல் எனப்படும் ஐந்து தொழில்களில் நான்காவது இடம் பெறும் மறைத்தல் என்பது
ஜீவன்களை உய்விக்க தேவைப்படுகிறது.இதுவே திரோதானம் என்று பெயர் பெறுகிறது. இந்தச் திரோதானச் சக்தியிலிருந்து இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி தோன்றுகின்றன. மனிதர்கள் ஆணவம்,கன்மம், மாயை,


என்ற மும்மலங்களுடன் இருக்கின்றார்கள். இவர்களின் மும்மலங்களையும் நீக்கி அவற்றின் சித்தமலம் அறுவித்து சிவமாக்கி ஆட்கொள்ள வேண்டும் என்பதே சிவத்தின் செயலாகும்.

இச்சா சக்தி,கிரியா சக்தி, ஞான சக்திகளையும் உமாமகேசுவரனின் ஒரு பாகமாக விளங்கும் உமையாளாகப்
பாவித்து சைவர்கள் வழிபடுகிறார்கள். இவ்விதம் சக்தியோடு கூடிய சிவனாரை வழிபடுவர்கள்

ஜோதிர்லிங்கம்.

             
உஜ்ஜயினிப்பட்டணம் வாரணாசிக்கு இணையாகச் சிறப்பித்துக் கூறப்படுவதற்கு என்ன காரணம்?
முதலாவது காரணம்: அது ஒரு மாகாளம்-மாகாளேஸ்வரரின் க்ஷேத்திரம். க்ஷிப்ரா நதிக்கரையில் உள்ள அப்புண்ணியப் பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை 'கும்பமேளா' (மகா மகப் பெருவிழா) நடைபெறுகிறது. நதிக்கரைஎங்கும் பரந்த சிமிட்டித் ¨ரைப் போடப்பட்ட அனேக நிரந்தரமான ஹோம குண்டங்கள் படுகின்றன.இரண்டாவது காரணம்: அது ஒரு ஜோதிர்லிங்க க்ஷேத்திரம். இந்தியாவில் உள்ள பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களில் மூன்றாவது ஜோதிர் லிங்கமாக அந்த க்ஷேத்திரத்தின் இறைவன் இருக்கிறார்.
 (நமது கோப்பிலிருந்து}


அன்பொடு
கிருஷ்ணன்,

சிங்கை
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி

    ....................
http://ezilnila.com/saivam
                                 http://singaporekovilgal.blogspot.com/

0 comments:

Post a Comment