Tuesday, December 3, 2013

                    1.கந்தசாமி கோயிலில் தரையில் கண்டறியப்பட்ட பகுதியை    
                        இறங்கிப் பார்க்கும் ஊழியர்.  

                     2.மடப்பள்ளி. 3.கண்டறியப்பட்ட தொட்டி.

செங்கல்பட்டை அடுத்த திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி கோயிலில் கண்டறியப்பட்ட பகுதி சுரங்கப்பாதையாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அறுபடை வீடுகளுக்கு இணையாக முருகபக்தர்களால் கொண்டாடப்படும் திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. விண்ணில் நின்று போர் புரிந்த முருகப்பெருமானுக்கு தனிச்சிறப்புடன் அமைக்கப்பட்ட கோயிலாகும். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுபாட்டின் கீழ் இக்கோயில் உள்ளது.

இக்கோயிலில் கும்பாபிஷேகத்துக்கான பணிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பகுதியாக புதுப்பிக்கப்பட்டு வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை, கோயிலின் மடபள்ளி அறையில் பணி நடந்தது.

அப்போது தரைப் பகுதியில் சிமென்ட் போடப்பட்டிருந்ததை அகற்றியபோது கருங்கல் சிலாப் தென்பட்டதை அடுத்து அதை அகற்றிப் பார்த்தனர். பாதை போன்று தெரிந்ததால் சுரங்கமாக இருக்கலாம் என்று சந்தேகமடைந்த பணியாளர்கள் கோயில் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

செயல் அலுவலர் பாலகிருஷ்ணன், மேலாளர் வெற்றிவேல் உள்பட பணியாளர்கள் அனைவரும் அங்கு சென்று பார்த்தனர். கருங்கல்லால் அமைக்கப்பட்ட 5 அடி 6 அங்குலத்தில் தொட்டி போன்று இருந்தது. உள்ளே இறங்கிப் பார்த்தபோது அங்கு சிலைகளோ, புதையலோ ஏதும் கிடைக்கவில்லை. தண்ணீர் சேமித்து வைக்க தொட்டியாக பயன்படுத்தியிருக்கலாம், அல்லது சாமி சிலைகள் மற்றும் ஆபரணங்களை ரகசியமாக பாதுகாக்க உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.                                                 

தினமணி,  04-12-2013                                                                


0 comments:

Post a Comment