Friday, February 21, 2014

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

மகா சிவராத்திரி பிரம்மோற்சவம்

உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஆண்டு தோறும் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அது போல இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் மார்ச் 6–ந் தேதி (வியாழக்கிழமை) வரை மொத்தம் 13 நாட்கள் நடைபெறுகிறது.

மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:–

மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான இன்று (சனிக்கிழமை) மாலை 3 மணி அளவில் கண்ணப்பர் கொடியேற்றத்துடன் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்குகிறது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) 2–வது நாள் காலையில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு வெள்ளி அம்பாரிகளில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானபிரசுனாம்பிகை அம்மையாரும், இரவு 9 மணி அளவில் வெள்ளி அம்பாரிகளில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானபிரசுனாம்பிகை அம்மையாரும் நான்கு மாட வீதிகளில் வீதி உலா நடக்கிறது.

சாமி, அம்மையார் திருக்கல்யாணம்

24–ந் தேதி (திங்கட்கிழமை) 3–வது நாள் காலை சூரியபிரபை வாகனமும், சப்பர வாகனமும், இரவு பூத வாகனமும், கிளி வாகனமும், 25–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) 4–வது நாள் காலை அன்ன வாகனமும், யாளி வாகனமும், இரவு ராவண வாகனமும், மயில் வாகனமும், 26–ந் தேதி (புதன்கிழமை) 5–வது நாள் காலை அன்ன வாகனமும், கிளி வாகனமும், இரவு சேஷ வாகனமும், யாளி வாகனமும், 27–ந் தேதி (வியாழக்கிழமை) 6–வது காலை இந்திர விமானமும், சப்பர வாகனமும், இரவு நந்தி வாகனமும், சிம்ம வாகனமும், 28–ந் தேதி (வெள்ளிக்கிழமை) 7–வது நாள் அதிகாலை 3 மணிக்கு லிங்கேற்ப தரிசனமும், காலை 10.30 மணிக்கு தேர் திருவிழாவும், இரவு 9 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.

மார்ச் 1–ந் தேதி (சனிக்கிழமை) 8–வது நாள் காலையில் அதிகார நந்தி வாகனமும், காமதேனு வாகனமும், இரவு யானை வாகனமும், சிம்ம வாகனமும், வருகிற 2–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 9–வது நாள் அதிகாலை 3 மணிக்கு சாமி, அம்மையார் திருக்கல்யாணமும், காலை 10 மணிக்கு யானை வாகனமும், சிம்ம வாகனமும், இரவு சாபதி கல்யாணமும் நடைபெறுகிறது.

கலை நிகழ்ச்சிகள்

3–ந் தேதி (திங்கட்கிழமை) 10–வது நாள் காலை 10 மணிக்கு கைலாசகிரி ஊர்வலமும், காலை 10.30 மணிக்கு ஜனதா அம்பாரி வாகனமும், இரவு குதிரை வாகனமும், சிம்ம வாகனமும், 4–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) 11–வது நாள் காலை கேடிக வாகனமும், காலை 11 மணிக்கு கொடியிறக்கமும், இரவு சிம்மாசன வாகனமும், காமதேனு வாகனமும், 5–ந் தேதி (புதன்கிழமை) 12–வது நாள் இரவு 9 மணிக்கு பல்லக்கு உற்சவமும், 6–ந் தேதி (வியாழக்கிழமை) 13–வது நாள் இரவு 9 மணிக்கு கோவிலுக்குள் பல்லக்கு உற்சவமும், இரவு 9.30 மணிக்கு ஏகாந்த சேவையுடன் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறும் 13 நாட்களும் மாலை 5 மணியில் இருந்து அதிகாலை வரை தூர்ஜடி கலையரங்கில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.                     

தினத்தந்தி

0 comments:

Post a Comment