சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமித் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா சனிக்கிழமை (மே:3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.இதையொட்டி கோவிலில் உள்ள கோமதியானை இன்று
(மே 2) வெள்ளிக்கிழமை பிடிமண் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சித்திரைமாதம் 10 நாள் நடக்கும். நிகழாண்டில் இத்திருவிழா சனிக்கிழமை (மே 3) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.சங்கரலிங்கசுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் காலை 6.40 மணிக்கு மேல் 7.15க்குள் கொடியேற்றப்படுகிறது.முன்னதாக வெள்ளிக்கிழமை(மே2) பிற்பகல் 12 மணிக்கு மேல் கோமதியானை பிடிமண் எடுக்க அருகில் உள்ள பெருங்கோட்டூர் கிராமத்திற்கு செல்கிறது.
இதைத் தொடர்ந்து 9ம் திருநாளான மே 11ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.திருவிழாவையொட்டி தினமும் சுவாமி,அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
தினமணி
0 comments:
Post a Comment