விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆலகிராமம் கிராமத்தில் உள்ள எமதண்டீஸ்வரர் கோயிலில், வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்ட பீடத்தில் பிள்ளையார் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. இதை கண்டறிந்த கல்வெட்டு ஆராய்ச்சி யாளர்களான வீரராகவன், மங்கையற்கரசி தம்பதி, ‘தமிழ கத்தில் உள்ள விநாயகர் சிற்பங்களில் இதுவே காலத்தால் முந்தையது’ என்று தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, ‘தி இந்து’விடம் அவர்கள் கூறியதாவது: சிவனின் மூத்த பிள்ளையை மூத்த பிள்ளை யார் என்றும், முருகனை இளைய பிள்ளையார் என்றும் வழக்கத்தில் சொல்லப்பட்டு வந்தது. அதுவே நாளடைவில் மூத்த பிள்ளையாரை, பிள்ளையார் என மக்கள் அழைத் தனர்.
தமிழகத்தில் பிள்ளையார் வழிபாடு முதலாம் நரசிம்ம பல்லவன் காலத்தில் தொடங்கியது என்பார்கள். நரசிம்ம பல்லவனின் படைத்தளபதி பரஞ்சோதி, வாதாபி யில் 2-ம் புலிகேசியை வெற்றி கொண்டதால் அதன் நினைவாக வாதாபி கணபதி என அழைக்கப் பட்டு, கி.பி. 7-ம் நூற்றாண்டில் பிள்ளையார் வழிபாட்டுக்கு வழி வகுத்தது என சிலர் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் தொல்லியல் மற்றும் வரலாற்று அறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வில், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி குடை வரைகோயிலில் உள்ள கற்பக விநாயகர் சிலை, கி.பி. 6-ம் நூற் றாண்டுக்கு உட்பட்டதாகும். இந்த கோயிலையும், விநாயகரையும் உருவாக்கிய கல்தச்சனின் பெயர் எக்காட்டூரூ க்கோன் பெருந்த(ச்)சன் என்று உள்ளது.
இது, கி.பி. 6-ம் நூற்றாண்டில் காணப்பட்ட எழுத்து வடிவில் இருப் பதால் வாதாபி காலத்துக்கு முன்பே பிள்ளையார் வழிபாடு தமிழகத்தில் இருந்து வந்ததை அறிய முடிகிறது. மேலும், இதே காலகட்டத்தைச் சேர்ந்த எழுத்து பொறிக்கப்படாத 2 சிற்பங்கள் உத்திரமேரூரிலும், வேளச்சேரியிலும் வழிபாட்டில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரி விக்கின்றனர்.
தற்போது திண்டிவனம் அருகே ஆலகிராமத்தில் உள்ள எமதண் டீஸ்வரர் கோயிலில் வட்டெழுத்து பொறிக்கப்பட்ட கல்லில் பிள்ளை யார், லகுவேஸ்வரர் மற்றும் முருகன் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இக்கோயிலின் தெற்கு வெளிப்புற அதிட்டானத்தில் பிள்ளையார் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. இச் சிற்பம் 75 செ.மீ உயரம், 40 செ.மீ அகலம் கொண்ட நீண்ட கல்லில் வெட்டப்பட்டுள்ளது.
பிள்ளையார் பீடத்தில் 3 வரி களில் கல்லெழுத்து பொறிக்கப் பட்டுள்ளது. இவ்வெழுத்தின் வடி வம் பூளாங்குறிச்சி எழுத்து வடி வத்துக்கு பின்னும், பிள்ளையார் பட்டி குடைவரைக்கோயில் கல் லெழுத்து வடிவத்துக்கு முந்தை யதும் ஆகும். அதாவது கி.பி. 4-ம் நூற்றாண்டுக்கும், கி.பி. 6-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட தாகும்.
விழுப்புரம் அருகே அரசலா புரம், செஞ்சி திருநாதர்குன்று, அவலூர்பேட்டை அருகே பறையன் பட்டு பாறை, பெருமுக்கல் ஆகிய இடங்களில் உள்ள கல்லெழுத்துகள் 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை களாகும். அதனுடன் ஒப்பு நோக் கும்போது, ஆலகிராமத்தில் பிள்ளையார் பீடத்தில் உள்ள கல்லெழுத்துகள் கி.பி. 5-ம் நூற் றாண்டைச் சேர்ந்தவை என்று ஐ.மகாதேவன் தெரிவித்தார்.
இச்சிற்பத்தில் “பிரமிறை பன்னூற- சேவிக- மகன்- கிழார்- கோன்- கொடுவித்து” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இது, கல்வெட்டை செதுக்கிய சிற்பியை பற்றி கூறுகிறது.
தமிழ் வட்டெழுத்துகளுடன் காணப்படும் இப்பிள்ளையார் இந் திய வரலாற்றுக்கு புதிய வரவா கும். இதுவே தமிழகத்தில் உள்ள விநாயகர் சிற்பங்களில் காலத் தால் முந்தையதாகும் மேலும், இக்கோயிலில் உள்ள லகுலீஸ் வரர், முருகன் சிற்பத்தில் உள்ள கல்வெட்டுகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். லகுலீஸ்வரர் சிற்பங்கள் குஜராத், கர்நாடகம், ஆந்திரம், வேதாரண்யம், நாகப்பட் டினம், கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் காணப்படுகின்றன.
லகுலீஸ்வரர் பசுபதர்களின் வழிபாட்டுக்குரிய சிவன் முருகன் போல காணப்படும் சிற்பம் முரு கன் சிற்பம்தானா என ஆய்வு மேற்கொண்ட பின்பே உறுதியாக சொல்ல முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர். ஆலகிராமத்தில் உள்ள எமகண்டீஸ்வரர் கோயிலுக்கு 1943, 1952, 1963, 1969 ஆகிய ஆண்டுகளில் காஞ்சி மகா பெரியவர் வருகை புரிந்துள்ளார்.
நன்றி :- தி இந்து
0 comments:
Post a Comment