Friday, October 30, 2015

சிலேட்டில் தங்களின் குழந்தைக்கு எழுத்துப் பயிற்சியைத் தொடங்கிவைக்கும் பெற்றோர்.

சிலேட்டில் தங்களின் குழந்தைக்கு எழுத்துப் பயிற்சியைத் தொடங்கிவைக்கும் பெற்றோர்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் உள்ள கூத்தனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள சரஸ்வதி கோயிலில் விஜயதசமி விழாவையொட்டி நேற்று குழந்தைகளுடன் ஏராளமான பெற்றோர் வந்து வழிபட்டனர்.

திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் பூந்தோட்டத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கூத்தனூர். கல்விக் கடவுளான சரஸ்வதி அம்மன் தமிழ கத்திலேயே தனியாக கோயில் கொண்டுள்ள தலம் இது. இவ்வூர் பழம்பெருமையும், சிறப்பும் வாய்ந்தது. சோழ மன்னன் 2-ம் ராஜராஜன் காலத்தில் அவைப் புலவராக விளங்கிய ஒட்டக்கூத் தருக்கு இவ்வூரைப் பரிசாக வழங்கியதால் இவ்வூர் கூத்தனூர் என அழைக்கப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன.

இக்கோயிலில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 9-ம் திருநாளான நேற்று விஜயதசமி விழாவையொட்டி பள்ளிக்குச் செல்லவுள்ள குழந்தைகளை இக்கோயிலுக்கு அழைத்து வந்து பேனா, பென்சில், நோட்டு உள்ளிட்டவைகளை வைத்து சரஸ்வதி அம்மனுக்கு அர்ச்சனை செய்து பொதுமக்கள் வழிபட்டனர்.

முதன்முதலாக பள்ளிக்குச் செல்லவுள்ள சிறு குழந்தைகளை கோயில் பிரகாரத்தில் கொட்டப் பட்டிருந்த நெல்மணிகள் மீதும், சிலேட்டுகள் மற்றும் நோட்டு களிலும் எழுதப் பயிற்றுவிப்பதைத் தொடங்கும் விதமான வித்யாரம்பம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment