Tuesday, November 3, 2015


’தாய்மொழியில்  என்ற  இயக்கம்’  மொழிவழிப்பட்ட  இயக்கமன்று. பிரார்த்தனை,  பக்தி  என்பன  உயிரின்  வளர்ச்சிக்குத்  துணைசெய்வன.  உயிரின்  வளர்ச்சி  நெஞ்சத்துடன்  தொடர்புடையது.  ஆதலால்,  நெஞ்சினைத்  தொட்டு  உணர்வினைத்  தூண்டும்  மொழிதான்  வழிபாட்டு  மொழியாக  அமைதல்  வேண்டும்.  அந்த  வாய்ப்பு த்  தாய்மொழிக்கே  மிகுதியும்  உண்டு.  இது  பொதுவான  கொள்கை.

நமது  நாட்டில்  தமிழில்  வழிபாடு  என்று  கேட்கும்  கோரிக்கை  பொதுவகையால்  மட்டுமன்று ;  “உரிமை  வகையினாலும்  எழுந்தது.  உலக  மொழிகளிலே  பக்திக்குரிய  மொழி  தமிழ்தான்  என்பது  அறிஞர்  முடிபு.  பத்திக்குரிய  அருமையும்  எளிமையும்  தமிழுக்கு  இயல்பாகவே  உண்டு.  தமிழ்,  வழிபாட்டு  மொழியாகவே  வளர்ந்து  வந்துள்ள  மொழி

---------------------------------------------------------------------------------------------------------------------------
மந்திரங்களுக்கு  மொழிவரயறை  இல்லை.  நிறைமொழி  மாந்தர்  அருளிச்  செய்தவை  மந்திரங்கள்.

”நிறைமொழி  மாந்தர்  ஆணையிற்  கிளந்த
மறைமொழி  தானே  மந்திரம்  என்ப “

என்று  தொல்காப்பியம்  கூறுகின்றது.  இதற்கு  உரைகண்ட  நச்சினார்க்கினியர்,  “தானே”  என்று  பிரித்தார்.  இவை  தமிழ்  மந்திரம்  என்றதற்கு”  என்று  எழுதுகின்றார்.  மாதவச்  சிவஞான  சுவாமிகள்   சமஸ்கிருதத்தின்பாலும்  மிகப்  பற்றுடையவர்.  சமஸ்கிருதம்  தேன்மொழி  என்ற  கருத்துடையவரே.  ஆயினும்  தாம்  இயற்றிய  காஞ்சிபுராணத்தில்  இறைவனை  அகத்தியர்  பூசித்த  பொழுது  தமிழ்  மந்திரங்கள்  கூறிப்  பூசித்ததாகக்  கூறுகின்றார்.


மன்னியைத்  தமிழ்க்கிளவி  மந்திரங்கள்  கணித்தடியேன்
செந்நெறியின்  வழுவாஇத்  திருக்காஞ்சி  நகர்வரிப்பின்
உனணுக்கன்  ஆகி  இனி  துறைந்திடவும்  பெறவேண்டும்
இன்னவரம்  எனக்கருளாய்  ர்ன்பெருமான்  என்றிரந்தான்

என்பது  காஞ்சிபுராணப்  பாடல்.  

---------------------------------------------------------------------------------------------------------------------------
உதவி :-
நால்வர்  நற்றமிழ்  மன்றம்,  8 , மேட்டுத்  தெரு, காஞ்சிபுரம். 1999.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment