Tuesday, November 24, 2015


திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, 2,668 அடி உயர மலை மீது மகா தீப கொப்பரையைக் கொண்டு செல்லும் பணியில் 

 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை (நவ. 25) நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்படும் மகா தீபத்தையும், கோயில் கொடிமரம் எதிரே பெரிய அகண்டத்தில் ஏற்றப்படும் தீபத்தையும் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 மகா தீப கொப்பரை மலைக்குப் பயணம்: இந்நிலையில், மகா தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் கொப்பரைக்கு, திங்கள்கிழமை அதிகாலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள், கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 இதையடுத்து, கோயிலில் இருந்து அம்மணி அம்மன் கோபுரம், வடக்கு ஒத்தவாடை தெரு வழியாக மலையேறும் பாதைக்கு கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. சுமார் 6 மணி நேரத்துக்குப் பிறகு 2,668 அடி உயர மலை மீது கொப்பரை பத்திரமாக வைத்து பூஜை செய்யப்பட்டது. 

 பர்வத ராஜ குல வம்சத்தினர் 10-க்கும் மேற்பட்டோர் கொப்பரையை மலைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனர். கொப்பரையுடன் தீப நெய் சேகரிக்கும் அகண்டமும் கொண்டு செல்லப்பட்டது. மலை மீது போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

1 comments:

  1. How to get to the MGM Grand Las Vegas hotel and casino via ride
    The cheapest way to 양주 출장안마 get to the MGM 계룡 출장샵 Grand Las 남원 출장마사지 Vegas hotel and casino via ride and the 광명 출장마사지 quickest way to the MGM 나주 출장안마 Grand Las Vegas hotel and casino via ride

    ReplyDelete