Sunday, August 28, 2016




தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள 
பெருமகளூரில் சோமநாதர் சிவன் கோயில் 
அருகில் கண்டெடுக்கப்பட்ட உலோகச் சிலை.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிக்காக நேற்று குழி தோண்டியபோது, 10 உலோக சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

பேராவூரணியை அடுத்த பெருமகளூரில் மிகவும் பழமையான சோமநாதர் சிவன் கோயில் உள்ளது.

இக்கோயிலின் முன் பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிக்காக நேற்று பள்ளம் தோண்டியுள்ளனர்.

இதில், 5 அடி ஆழத்தில் குழி தோண்டியபோது, சுமார் இரண்டரை அடி உயரம், 50 கிலோ எடை உள்ள உலோகத்தினால் ஆன சிவன் சிலை கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து தோண்டியபோது, பூமாதேவி, விநாயகர், நடராஜர் உள்ளிட்ட 10 உலோக சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

தகவலறிந்த பேராவூரணி வட்டாட்சியர் ரகுராமன் சிலைகளை பார்வையிட்டு, அவற்றை மீட்டு, வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றார். இந்த சிலைகள் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளவை எனக் கூறப்படுகிறது.

நன்றி :- இந்து

0 comments:

Post a Comment