பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் முருகனையே முழுமுதற் கடவுளாகப் போற்றி வழிபட்டவர். முருகனின் திருக்காட்சியைப் பலமுறை கண்டு தரிசித்த பெருமைக்குரிய பேரருளாளர். இவர் பொருட்டு முருகப் பெருமான் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். அந்த வரிசையில், பழநி முருகன் ஓர் அற்புதத்தை பங்குனி பெüர்ணமி நாளில் நிகழ்த்தினான்.
பாம்பன் சுவாமிகள், இராமேஸ்வரம் அருகிலுள்ள பிரப்பன் வலசைப் பதியின் மயானத்தில் நான்கு பக்கங்களிலும் முள்வேலி நாட்டப்பட்ட சதுரக்குழி அமைத்து, அதனுள் அமர்ந்து ஊண், உறக்கமின்றி 35 நாள்கள் தவம் மேற் கொண்டார்.
அதன் பயனாக, பழநி முருகப்பெருமான் பாம்பன் சுவாமிகளுக்குக் காட்சி கொடுத்து, உபதேசம் செய்தருளினான். இது நிகழ்ந்தது விஜய ஆண்டு 1894 பங்குனித் திங்கள்.
இப்புனித நிகழ்ச்சியை 120 ஆவது ஆண்டு விழாவாக, வரும் மார்ச் 16-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மகாதேஜோ மண்டல சபையும், நடராசன்-கனகாம்புஜம் அறக்கட்டளையும் இணைந்து, திருவான்மியூரில் அமைந்துள்ள பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் சமாதி நிலையத்தில் கொண்டாட இருக்கின்றன.
வெள்ளிமணி , தினமணி
0 comments:
Post a Comment