சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு சுவாமிக்கு
அபிஷேகம் செய்ய ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தங்க அபிஷேக கலசத்தை பக்தர்
ஒருவர் காணிக்கையாக வழங்கியுள்ளார்.
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன உத்ஸவம் புதன்கிழமை
கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஸ்ரீ நடராஜமூர்த்திக்கு தினமும் ஆறுகால
பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஓவ்வொரு பூஜைக்கும் முன்னதாக
ஸ்ரீசந்திரமௌலீஸ்வரருக்கு (ஸ்படிக லிங்கம்) அபிஷேகம் செய்து தான் கால பூஜை
நடைபெறும். அந்த ஸ்ரீசந்திரமௌலீஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய 600 கிராம் எடை
கொண்ட தங்கத்தினாலான சுமார் 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அபிஷேக கலசத்தை
பெயர் வெளியிட விரும்பாத பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கியுள்ளார். தங்க
கலசத்தை புதன்கிழமை ஸ்ரீநடராஜர் கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர்
ரா.பாஸ்கர தீட்சதரிடம் வழங்கப்பட்டது.
தினமணி
0 comments:
Post a Comment