குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.
கடந்த சில தினங்களாக குற்றாலத்தில் சீசன் களைகட்டி வருகிறது. பேரருவி,
ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகளவில் கொட்டுகிறது.
இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும்
அதிகமாக இருந்தது. பேரருவியில் தண்ணீர் வழிந்தோடும் பகுதியிலும் சுற்றுலாப்
பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர்.
சனிக்கிழமை காலைமுதல் அவ்வப்போது மேகமூட்டத்துடன் மிதமான சாரல் மழையும்,
மிதமான வெயிலும் மாறி மாறி நிலவியது. நாள் முழுவதும் குளிர்ந்த காற்று
வீசியது.
தினமணி
0 comments:
Post a Comment