Wednesday, November 25, 2015



கும்பகோணம்: முருகனின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடான, தஞ்சை மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வந்தபோதிலும், திருக்கார்த்திகை திருவிழா  சிறப்பு வாய்ந்ததாகும். இத்திருவிழா வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது.கோயிலின் கார்த்திகைத் தேர்  60 ஆண்டுக்கு முன்பே  சிதிலமடைந்துவிட்டதால் கார்த்திகை திருவிழாவின் 9ம் நாள் நடைபெற்று வரும் தேரோட்டத்தின்போது கட்டுத்தேரிலேயே முருகன் வீதியுலா வந்தார். சமீபத்தில் நடந்த கோயில் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு   ரூ.32 லட்சத்தில் சுமார் 15 அடி உயரத்தில் 35 டன் எடையில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் புதிய மரத்தேர் உருவாக்கப்பட்டது.
 
60 ஆண்டுகளுக்கு பின் இத்தேரின் வெள்ளோட்டம்  கடந்த 18ம் தேதி  நடந்தது. வரும்  25ம் தேதி காலை 9மணிக்கு முருகப்பெருமான் இத்தேரில் எழுந்தருள புதிய தேரின் தேரோட்டம் நடைபெற உள்ளது. இரவு 9.30 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்து திருக்கார்த்திகை தீபகாட்சி நடைபெற உள்ளது.விழாவுக்கு பக்தர்கள் குவிவர் என்பதால், தேவையான ஏற்பாடுகள் குறித்து தஞ்சை கலெக்டர் சுப்பையன் தலைமையில் பல்வேறு துறை அலுவலர்களை கொண்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கும்பகோணத்தில் நடந்தது. சப் கலெக்டர் கோவிந்தராவ், மயிலாடுதுறை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். - 

தமிழ் முரசு

0 comments:

Post a Comment